2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படலாம்

Editorial   / 2019 ஏப்ரல் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம், 19ஆம் திகதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, அ.தி.மு.க, பிற கட்சிகள் சார்பில், இன்று (19) வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள, 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு, நேற்று (18) வாக்குப்பதிவு இடம்பெற்றது. நீதிமன்ற வழக்கு காரணமாக, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கோவை மாவட்டம், சூலுார் தொகுதி, அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார். இதனால், அந்தத் தொகுதி வெற்றிடமானது. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும்,  மே மாதம் 19ஆம் திகதி, இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தொகுதிகளில், 22ஆம் திகதி, வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. தி.மு.க சார்பில், நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் ர்தல் முடிந்தபின்னர், வேட்பாளர்களை அறிவிக்க, அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று பௌர்ணமி தினம் என்பதால், வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .