2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்திய பிரதம நீதியரசருக்கு எதிரான மனு நிராகரிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரதம நீதியரசருக்கு எதிரான மனுவை, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நிராகரித்துள்ளார். தவறான நடத்தைகள் எனத் தெரிவித்தே, இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இக்குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கன அன்று என, வெங்கய்யா நாயுடு நிராகரித்தார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையின் சபாநாயகராகவும், வெங்கய்யா நாயுடு கடமையாற்றுகிறார். அவரால் எடுக்கப்பட்ட இம்முடிவு, இந்திய மத்திய அரசாங்கத்துக்குக் கிடைத்த முக்கியமான நிவாரணமாகக் கருதப்படுகிறது.

பிரதம நீதியரசர் தீபக் மிஸ்ரா, தவறான நடத்தைகளைப் புரிந்தார், தனக்குக் கிடைக்கப்பெற்ற அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தார் என, மேலவையின் 245 உறுப்பினர்களில் 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, இம்மனுவை வழங்கியிருந்தனர். அதேபோல், முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதில் முறைகேடாக நடந்தார் எனவும், காணிக் கொள்வனவு தொடர்பில் தவறாகச் செயற்பட்டார் எனவும், அவர் மீது குற்றச்சாட்டுகள் காணப்பட்டன.

எனினும், இவற்றை நிராகரித்த நாயுடு, நீதித்துறையின் சுயாதீனத் தன்மையைப் பாதிப்பதாக, இக்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன எனவும், இக்குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை காணப்படாத நிலையில், அதை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் ஒருவரை நீக்குவதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை கிடைப்பதோடு, ஜனாதிபதியின் சம்மதமும் தேவையாகும். கீழவையின் பெரும்பான்மையை, பாரதிய ஜனதா கட்சியே கொண்டிருக்கும் நிலையில், அது சாத்தியமற்றது எனக் கருதப்பட்டது. எனினும், இம்மனு மீது வாக்களிப்பு இடம்பெற்றால், மத்திய அரசாங்கம் மீது அழுத்தங்கள் ஏற்படுமெனக் கருதப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .