2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்கும்’

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் பொருளாதார வளர்ச்சி வீதம், 2018 -2019ஆம் ஆண்டில், 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற பாதீட்டுக் கூட்டத் தொடர், நேற்று (29) ஆரம்பமானது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.  

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  

“சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், சற்றுத் தேக்கமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும், ஆறு மாதங்களுக்கு பின், நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி, வங்கி சீர்த்திருத்த நடவடிக்கைகள், அந்நிய நேரடி முதலீட்டுக் கெடுபிடிகள் தளர்வு, ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் புதிய வேகமெடுத்துள்ளது.  

“உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம், 6.75 சதவீதமாக இருக்கும்.

“அதேசமயம் அடுத்த நிதியாண்டான 2018 - 2019இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ எனக் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .