2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தோனேஷியா அனர்த்தத்தில் 101 பேர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஷியா, கிழக்குத் திமோரை நேற்று தாக்கிய வெள்ளம், நிலச்சரிவுகளால் குறைந்தது 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

பருவகால மழை காரணமாக அணைகளை மீறி வெள்ளம் பாய்வதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ள நிலையில், இந்தோனேஷியாவும், கிழக்குத் திமோரும் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு இந்தோனேஷியாவிலுள்ள புளோரஸ் தீவிலிருந்து கிழக்குத் திமோர் வரையான பகுதியே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியால் மாத்திரம் 80 பேர் உயிரிழந்ததுடன், டசின் கணக்கானோரை இன்னும் காணவில்லையென்ற நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண், மோசமான வானிலையானது மோசமானதொரு சவாலொன்றாகியுள்ளதுடன், குவிந்து போயுள்ள சிதைவுகள், தேடுதல் மற்றும் மீட்பு அணிக்குத் தடையேற்படுத்துவதாக, இந்தோனேஷிய இடர் தடுப்பு முகவரகம் பேச்சாளர் றடிட்யா டிஜாடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிழக்குத் திமோரில் குறைந்தது 21 பேர் உயிர்ரிழந்துள்ளதாக, அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி முகவரகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .