2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தோனேஷியா ஜாவாவை அதிர வைத்த நிலநடுக்கம்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்றால், சுனாமி எச்சரிக்கைகளில்லாமல்,  இந்தோனேஷியாவின் பிரதான தீவான ஜாவாவில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், கட்டடங்களைச் சேதமடைந்ததுடன், சுற்றுலாத் தீவான பாலியை அதிரவைத்துள்ளது.

ஜாவாவின் தென் கரையோரத்தை நேற்று முற்பகல் 12.30 மணிக்கு, 6.0 றிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக, ஐக்கிய அமெரிக்க புவிச்சரிதவியல் அளவீடு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள மலாங் மாவட்டத்திலுள்ள சும்பெர்புசுங் நகரத்துக்கு தெற்காக 45 கிலோ மீற்றர் தொலைவில் 82 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைகொண்டுள்ளது.

இந்நிலயில், ஏழு பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் மோசமாகக் காயமடைந்ததாகவும், 10 பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியதாக தேசிய இடர் தடுப்பு முகவரகப் பேச்சாளர் றடிட்யா ஜதி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .