2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இனச் சுத்திகரிப்பு ஏற்படும் ஆபத்து’

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய ஆபிரிக்கக் குடியரசில், இனச் சுத்திகரிப்பு ஏற்படக்கூடிய ஆபத்துக் காணப்படுகிறது என எச்சரித்துள்ள, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், அங்குள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ஏற்கெனவே காணப்படும் 12,000 படையினர், அங்கு காணப்படும் நிலைமைக்குப் போதுமானவர்களாக இல்லை எனத் தெரிவித்துள்ளதோடு, அங்கு தொடர்ச்சியாக வன்முறை அதிகரித்துவரும் காரணமாக, மேலதிக படையினர் தேவைப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

“2016ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து, பாங்குய் பகுதிக்கு வெளியே, பாதுகாப்பு நிலைமை, தொடர்ச்சியாக மோசமடைந்துள்ளது. பிரிவினை வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் பகுதிகளில், இனச் சுத்திகரிப்பு இடம்பெறுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது.

“ஆகவே, 900 படையினரால், அங்குள்ள படையினர் படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, நான் பரிந்துரைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம், மத்திய ஆபிரிக்கக் குடியரசுக்கான தனது முதலாவது விஜயத்தை, இம்மாத முடிவில் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையிலேயே, அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜனாதிபதியாக நீண்டகாலம் இருந்த பிரான்சிஸ் பொஸிஸே, 2013ஆம் ஆண்டு, முஸ்லிம்களைப் பிரதானமாகக் கொண்ட பிரிவால், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அங்கு வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை இடம்பெற்றுள்ள வன்முறைகளில், 600,000 பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளதோடு மேலும் 500,000 பேர், எல்லையைக் கடந்து, அகதிகளாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .