2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இம்ரான் கானின் அமைச்சரவையில் 15 பேர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பிரதமராக நேற்று முன்தினம் (18) பதவியேற்ற இம்ரான் கான், 15 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

15 அமைச்சர்களுக்கு மேலதிகமாக, 5 அமைச்சரவை ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சராக 2011ஆம் ஆண்டு வரை இருந்து, பின்னர் இம்ரான் கானின் கட்சிக்கு மாறிய ஷா மஹ்மூட் குரேஷி, மீண்டும் அதே பதவியைப் பெற்றுக் கொண்டார்.

இதில் குறிப்பிடத்தக்கதாக, 15 அமைச்சர்களில் 9 பேர், இதற்கு முன்னர் அமைச்சர்களாகவும், 5 ஆலோசகர்களில் 3 பேர் ஆலோசகர்களாகவும், ஜெனரல் முஷாராப்பின் இராணுவ ஆட்சிக் காலத்தில் பதவி வகித்தவர்களாவர்.

1992ஆம் ஆண்டில், பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த இம்ரான் கான், தன்னுடைய பதவியேற்பு நிகழ்வுக்கு, தன்னுடன் விளையாடிய ஏனைய வீரர்களையும் அழைத்திருந்தார். அத்தோடு, இந்தியாவிலிருந்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சிதுவும், நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .