2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இராஜினாமா செய்த ஜனாதிபதி மொராலெஸ்

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்முறையைத் தளர்ச்சியடையச் செய்வதற்காக தான் இராஜினாமா செய்வதாக பொலிவிய ஜனாதிபதி இவா மொரெலெஸ் நேற்று தெரிவித்துள்ளார். குறித்த வன்முறையானது பிரச்சினைக்குரிய கடந்த மாத 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பொலிவியாவை ஆட்கொண்டிருந்தது.

எவ்வாறெனினும், ஆட்சிக் கவிழ்ப்பொன்றின் பாதிக்கப்பட்ட ஒருவர் தானெனவும், கைதை எதிர்நோக்கியிருந்ததாகவும் தெரிவித்து மேலும் பிரச்சினை ஏற்படுவதுக்குரிய பயங்களை இவா மொராலெஸ் விதைத்துள்ளார்.

பதவி விலகுமாறு இவா மொராலெஸை இராணுவம் கோரியதைத் தொடர்ந்து, லா பஸ்ஸின் வீதிகளில் மோதல்கள் நேற்றிரவு இடம்பெற்றிருந்ததுடன், சில கட்டடங்கள் எரிந்திருந்தன.

ஏறத்தாழ 14 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருக்கும் இவா மொராலெஸ், தன்னைக் கைது செய்ய பொலிஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். தனது கைதுக்கான சட்டரீதியற்ற அழைப்பாணையொன்றை பொலிஸ் கொண்டிருந்ததாகவும், தனது வீட்டை வன்முறைக் குழுக்கள் தாக்கியதாகவும் டுவிட்டரில் பின்னர் இவா மொராலெஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இவா மொராலெஸின் கைதுக்கான அழைப்பாணை எதுவும் காணப்படவில்லை என தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பொலிவிய பொலிஸ் படையின் தளபதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பொலிவியாவின் உப ஜனாதிபதி இவாரோ கர்கா லினேராவும் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், மேற்குறித்த விடயங்களை ஆட்சிக் கவிழ்ப்பாக வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அல்பேர்ட்டோ பெர்ணான்டஸ் ஆகியோர் வர்ணித்துள்ளனர்.

இதேவேளை, இவா மொராலெஸ் புகலிடம் கோரினால், அவருக்கு மெக்ஸிக்கோ புகலிடம் வழங்கும் என மெக்ஸிக்கோவின் வெளிநாட்டமைச்சர் மார்செலோ எப்ரார்ட் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .