2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராணுவ ஆட்சி நீடிப்புக்கு அனுமதி

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள தீவான மின்டானாவோவில், இராணுவ ஆட்சியை நீடிப்பதற்கு, அந்நாட்டு நாடாளுமன்றம், ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேக்கு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தாண்டு முழுவதும், இந்த நீடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய ஆயுததாரிகளையும் இடதுசாரி ஆயுததாரிகளையும் எதிர்த்துப் போட்டியிடுவதற்கே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்து இடம்பெற்ற அமர்வில், 267 உறுப்பினர்களில் 240 பேர், இராணுவ ஆட்சியை நீடிப்பதற்கு அனுமதி வழங்கினர். 

அடுத்தாண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரை இந்த நீடிப்பு அமுலிலிருக்க வேண்டியுள்ள நிலையில், முன்னைய சர்வாதிகாரி ஃபெர்டினன்ட் மக்ரோஸின் காலத்தின் பின்னர், அதிக காலத்துக்கு இராணுவ ஆட்சி நீடிக்கப்பட்ட வரலாறாக இது அமையவுள்ளது. ஃபெர்னடினன்டின் காலப்பகுதி, பிலிப்பைன்ஸ் வரலாற்றில் இருண்ட காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. 

இந்நிலையில், ஏற்கெனவே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமைக்கு மத்தியில், தற்போது இராணுவ ஆட்சி நிடிப்பதற்கும், இவ்வாறான ஆதரவு வழங்கப்பட்டுள்ளமை, முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த நீட்டிப்புக்கான அனுமதியை வரவேற்ற ஜனாதிபதி டுட்டேர்ட்டே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளைப் போலவே, இடதுசாரி ஆயுதக்குழுவான புதிய மக்கள் இராணுவமும் ஒரே அளவிலான ஆபத்தைக் கொண்டன எனக் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X