2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலண்டன் தீ: ‘ஆபத்தான நிலையில் 60 கட்டடங்கள்’

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனின் கிரென்பெல் கோபுரக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, கட்டடங்களின் பாதுகாப்புத் தொடர்பான கவனம் அதிகரித்துள்ள நிலையில், இலண்டனிலுள்ள 60 கட்டடங்கள், பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.

இம்மாத ஆரம்பத்தில், கிரென்பெல் கோபுரக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, 79 பேர் கொல்லப்பட்டனர். இதன் அதிர்ச்சி, ஐக்கிய இராச்சியம் முழுவதும் பரவியிருந்தது.

இதன்போது, குறித்த கட்டடத்தின் பாதுகாப்புக் குறைபாடு சம்பந்தமாக, அதிக கவனம் எழுந்ததுடன், அக்கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உரிய தரமற்றவை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையிலேயே, தீ சம்பந்தமான சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, 60 கட்டடங்கள், அச்சோதனையில் தோல்வியடைந்துள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட, 34 கட்டடங்கள் என்ற எண்ணிக்கையை விட, கணிசமான அதிகரிப்பாகும்.
இதில், கம்டென் பிரதேசத்தில் காணப்படும் கட்டடத் தொகுதியொன்று, பாரிய ஆபத்தில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வாழும் சுமார் 200 பேர், தங்களது இடத்திலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .