2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலவச சனிட்டரி தயாரிப்புகளை அறிவித்த ஆர்டன்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து அனைத்து நியூசிலாந்து பாடசாலைகளும் சனிட்டரி தயாரிப்புக்களை இலவசமாகக் கொண்டிருக்கும் என அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் இன்று அறிவித்துள்ளார். 

நியூசிலாந்தில் மாதவிடாய் வறுமையை ஒழிக்கும் நோக்கிலேயே குறித்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 

கடந்தாண்டு நடுவில் முன்னோடித் திட்டமாக 15 பாடசாலைகளில் 3,200 யுவதிகளுக்கு இலவச மாதவிடாய் பொருள்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

இலவசமாக மாதவிடாய் பொருள்களை வழங்குவதன் மூலம் அரசாங்கமானது நேரடியாக வறுமையைக் கணக்கெடுப்பதற்காக, பாடசாலை வருகையைக் கூட்டுவதற்கான, சிறுவர்களின் உடல்நலனின் நேர்மறைத் தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒரு வழியென அறிக்கையொன்றில் பிரதமர் ஆர்டன் தெரிவித்துள்ளார். 

குறித்த பிரச்சினையால் 12-இல் ஒரு யுவதி பாடசாலையைத் தவறவிடுவதாக ஆராய்ச்சி தெரிவிப்பதாக பிரதமர் ஆர்டன் மேலும் கூறியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .