2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலவசமாக 500 மில்லியன் பேஸ்புக் பயனர் தரவுகள்?

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலவசமாக 500 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி இலக்கங்கள், ஏனைய தரவு உள்ளடங்கலான தகவல்களை தாங்கள் அளிப்பதாக ஹக்கரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தரவுத்தளமானது, இவ்வாண்டு ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்து ஹக்கர் வட்டங்களில் சுழலுகின்ற பேஸ்புக்குடன் தொடர்புடைய தொலைபேசி இலக்க தொகுதி போலத் தோன்றுகின்றது.

இது குறித்து முதல் தடவையாக, தொழில்நுட்ப வெளியீடான மதபோர்ட்டே பிரசுரித்ததாக இஸ்ரேலிய இணையப்பாதுகாப்பு புலனாய்வு நிறுவனமான ஹட்ஸன் றொக்கின் இணை நிறுவுநர் அலோன் கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தரவானது மிகவும் பழையதென்றும், கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலேயே இப்பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக அறிக்கையொன்றில் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .