2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இவர்மெக்டின் ஒட்டுண்ணி மருந்து கொரோனாவை தடுக்கும்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரஸ் வளர்ச்சியடையாமல் கட்டுப்படுத்தும் என அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மற்றொருபுறம் கொரோனாவை முழுவதுமாக அழிக்க தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளில் பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்ந்து, அவுஸ்திரேலிய பல்கலையில் கொரோவை கட்டுப்படுத்தும் மருந்த குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் அது நோயை வளர விடாமல் தடுக்கும் எனவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக ஆன்டிவைரல் ஆராய்ச்சி இதழில் வெளியிட்ட ஆய்வில் கூறியதாவது : உலகெங்கிலும் ஏற்கெனவே கிடைக்கக்கூடிய ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து 48 மணி நேரத்திற்குள் உயிரணு கலாச்சாரங்களில் வளர்க்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலை அழிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது கொரோனாவிற்கான புதிய மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சி மற்றும் சோதனைக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .