2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இஸ்‌ரேலிய உளவுநிரலால் மன்னிப்புச் சபை இலக்குவைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது அலுவலகத்தின் ஊழியர், அரசாங்கமொன்றால் உளவு பார்க்கப்பட முயலப்பட்டார் என, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

தமது ஊழியருக்கு, வட்ஸ்அப் செயலி மூலம், சுட்டியொன்று அனுப்பப்பட்டது எனவும், அச்சுட்டியைப் பயன்படுத்தி அதைத் தரவிறக்கம் செய்தால், இஸ்‌ரேலைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்றால் வடிவமைக்கப்பட்ட உளவு பார்க்கும் செயலியொன்று தரவிறக்கப்பட்டிருக்கும் எனவும், மன்னிப்புச் சபை தெரிவித்தது.

அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த அச்செய்தி, ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு வெளியே இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கோரியிருந்தது. சவூதி அரேபியாவில், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை போராடி வருகிறது. இதைப் பயன்படுத்தியே, இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில், எந்த நாட்டால் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் குறிப்பிட ப்பட்டிருக்கவில்லை. ஆனால், சவூதி அரேபிய அரசாங்கமே இதை மேற்கொண்டிருக்கலாம் என, ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X