2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இஸ்‌ரேலைக் கண்டித்தது ஐ.நா பொதுச் சபை

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனர்களுக்கு எதிராக, தேவைக்கதிகமாக பலத்தைப் பிரயோகித்தமைக்காக, இஸ்‌ரேலை நேற்று முன்தினம் (13) கண்டித்த, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, இஸ்‌ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப் பகுதிகளிலுள்ள பலஸ்தீனர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறையொன்றைச் சமர்ப்பிக்குமாறு, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்துக்கு ஆரவாக 120 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் கிடைத்ததோடு, 45 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன.

இவ்வாறான தீர்மானமொன்று, ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, தனது வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அத்தீர்மானத்தை ஐ.அமெரிக்கா தோற்கடித்திருந்தது. 

பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், காஸாவில் பொதுமக்கள் வாழும் இடங்களிலிருந்து, இஸ்‌ரேலை நோக்கி வீசப்பட்ட றொக்கெட்டுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், காஸா எல்லையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் விளைவாக, மார்ச் 30ஆம் திகதியிலிருந்து இதுவரை, 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இஸ்‌ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் அவசியமானது என, பல நாடுகள் குறிப்பிட்டன.

ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என்றில்லை. ஆனால், அரசியல் ரீதியாக, கடுமையான அழுத்தங்களை அவை ஏற்படுத்தக்கூடியன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X