2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இஸ்ரேலியக் குடியேற்றங்களுடன் 206 நிறுவனங்களுக்குத் தொடர்பு

Editorial   / 2018 பெப்ரவரி 02 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்குக் கரையில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் இஸ்‌ரேலியக் குடியேற்றங்களோடு தொடர்புடைய நிறுவனங்கள் என, 206 நிறுவனங்களை அடையாளங்கண்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. பலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வன்முறைகளில் பங்குபெற வேண்டாமென, அந்நிறுவனங்களிடம் ஐ.நா கோரியுள்ளது.

“இஸ்‌ரேலியக் குடியேற்றங்களின் உருவாக்கம், பராமரிப்பு, விரிவுபடுத்தல் ஆகியவற்றின், வணிகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன” என, ஐ.நாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இஸ்‌ரேலால் 1967ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பலஸ்தீனப் பிராந்தியங்களின் மக்கள் அடர்த்தியை, இந்தக் குடியிருப்புகள் பாதிக்கின்றன எனக் குறிப்பிட்ட ஐ.நா, பலஸ்தீனர்களின் சுயாட்சிக்கான உரிமையை இது பாதிக்கிறது என்று தெரிவிக்கிறது.

பட்டியற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில் 143 நிறுவனங்கள், இஸ்‌ரேலிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ காணப்படும் நிறுவனங்கள் ஆகும். 22 நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்காவிலும், ஏனைய 41 நிறுவனங்கள், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 22 நிறுவனங்களில் காணப்படுகின்றன.

குறித்த நிறுவனங்களில் பெயர்களை வெளியிட்டிருக்காத இவ்வறிக்கை, ஆனால் அவற்றுள் 64 நிறுவனங்களை, ஏற்கெனவே தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டுள்ள இப்பட்டியலிலுள்ள நிறுவனங்கள் மீது, புறக்கணிப்புகள் அல்லது வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என, இஸ்‌ரேல் அஞ்சுகிறது.

இது தொடர்பான விசாரணைகள் 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் போது, கறுப்புப் பட்டியலொன்றைத் தயாரிக்க முயலப்படுவதாகவும், இஸ்‌ரேலுக்கெதிராக ஐ.நா செயற்படுகிறது எனவும், இஸ்‌ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .