2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இஸ்லாமிய ஆயுததாரிகள் சிக்கியுள்ளனர்’

Editorial   / 2017 ஜூன் 22 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு பிலிப்பைன்ஸ் நகரான மறாவியிலுள்ள இஸ்லாமிய ஆயுததாரிகள், சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சூட்டு வலு குறைவடைவதாகவும், இராணுவம், இன்று (22) தெரிவித்துள்ளது.   

மறாவி நகரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மோதல், ஐந்தாவது வாரமாகத் தொடருகின்ற நிலையிலேயே, இராணுவத்தின் மேற்கூறப்பட்ட கருத்து வெளியாகியுள்ளது.   

இன்னும் மறாவியிலேயே இருக்கின்ற ஆயுததாரிகளின் எண்ணிக்கை, 100க்கும் சற்று அதிகமானதாகத் குறைவடைந்துள்ளதாக, இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் ஜோ-அர் ஹெரேரா, நேற்றுத் தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், ஆயுததாரிகளின் பகுதியானது ஒரு சதுர கிலோமீற்றராகக் குறைக்கப்பட்டுள்ளதாக, லெப்டினன்ட் கேணல் கிறிஸ்டோபர் டம்புஸ் தெரிவித்துள்ளார். டம்புஸ்ஸின் படைகள், பாலங்களைத் தாண்டியுள்ள தப்பிக்கும் பாதைகளை முடக்கியுள்ளன.   

எவ்வாறெனினும், பாடசாலைகள், பள்ளிவாசல்களிலிருந்து, ஆயுததாரிகள், ஸ்னைப்பரை இன்னும் பயன்படுத்துவதாகவும் வீடு வீடாக முன்னேறும் பிலிப்பைன்ஸ் படைகளின் முன்னேற்றத்தை, வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் தடுப்பதாக டம்பஸ் தெரிவித்துல்ளார்.   

இதேவேளை, மனிதக் கேடயங்களாக, வீதிகளில் நிறுத்தப்பட்ட, கறுப்பு உடையணிந்த, குறைந்தது ஐந்து பொதுமக்களை தான் கண்டதாக டம்பஸ் கூறியுள்ளார்.   

உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, நேற்று  (21) வரைக்கும், ஒரு மாதமாக நீடிக்கும் மோதலில் 369 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், முக்கால்வாசிப் பேர் ஆயுததாரிகள். பாதுகாப்புப் படையினர் 67 பேரும் பொதுமக்கள் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.   

இஸ்லாமிய ஆயுததாரிகள் பலவீனமடைவதான சமிக்ஞைகள் தென்படுகின்றபோதும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, பிராந்தியத்தில் காலூன்ற முற்படுகையில், மறாவி நகர் முற்றுகையானது, மேலதிக வன்முறைகளுக்கான ஆரம்பமாக அமையுமென, தென்கிழக்காசிய அரசாங்கங்கள் அஞ்சுகின்றன.   

மறாவியில், கடந்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகியவை இணைந்த, தீவுப் பிராந்தியத்தில், இணைந்த கண்காணிப்புக்களை மேற்கொண்டுள்ளன.   

இந்நிலையில், மறாவி நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் ஆயுததாரிகள், தமது கிழக்கு மாநிலமான சபாவின் மூலமாக, பிலிப்பைன்ஸை கடக்க முற்படுவார்கள் என அஞ்சுகிறது.   

சட்டரீதியற்ற அகதிகளாக அல்லது வெளிநாட்டு மீனவர்களாக, மலேஷியாவுக்குள் ஆயுததாரிகள் நுழைவார்கள் என அஞ்சுவதாக, கிழக்கு சபா பாதுகாப்பு கட்டளையகத்தின் தலைவர் வான் அப்துல் பரி வான் அப்துல் காலிட் தெரிவித்துள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .