2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஈகைத் திருநாளன்று காஷ்மிரில் கல்வீச்சு

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில், ஈகைத் திருநாளுக்காக, அனைத்து இஸ்லாமியர்களும் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு, நேற்று (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டமையால், குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.  

காஷ்மிரின் நகர்ப் பகுதிக்குள், சுமார் 100,000க்கும் அதிகமான மக்கள், வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக, வந்திருந்தனர். எனினும், வழிபாடுகள் முடிவடைந்த சிறிது நேரத்துக்குள், பாதுகாப்புப் படையினரை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள், எப்போதும் போல கற்களை வீசி, வன்முறையில் ஈடுபடுதற்கு முயன்றமையால், அப்பகுதியில் அமைதியின்மை நிலவியது.  

எனினும், இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, யாரும் காயமடையவில்லை என்று, பாதுகாப்புப்​ படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்தச் சம்பவத்தையடுத்து, பிரிவினைவாதத் தலைவர்களான சையத் அலி ஜீலானி மற்றும் மிர்வாஸ் உமர் ஃபரூக் ஆகியோர், பாதுகாப்புப் படையினரால் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். ஈகைத் திருநாளன்று, வன்முறை வெடித்துவிடும் என்ற அச்சத்தாலேயே, அவர்கள் வீட்டுக்குள் சிறைபிடித்து வைக்கப்பட்டதாக, பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.  

எனினும், ஜம்மு- காஷ்மிர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், கைதுசெய்யப்பட்டு, ஸ்ரீநகர் மத்தியச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .