2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈராக் தென் நகரங்களில் வன்முறை: புதிய பிரதமர் தொடர்பில் விவாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஈராக்கிய நகரங்களை வன்முறை தாக்கியுள்ள நிலையில், அரசாங்கத்தைக் கவிழ்த்த இரண்டு மாத ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக ஈராக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது பிராந்திய நட்புறவாளர்கள் தலைநகர் பக்தாத்தில் நேற்றுக் கூடியுள்ளனர்.

சீர்திருத்தத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள், பக்தாத்தையும், ஷியாக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென் பகுதியையும் இவ்வாண்டு ஓக்டோபர் மாதம் நிறைத்துள்ளனர்.

ஆளும் வர்க்கத்துக்கு சவாலொன்றாகக் காணப்பட்ட பேரணிகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் ஆயுதக் குழுக்களிடமிருந்து வன்முறையைச் சந்தித்த நிலையில் 420க்கும் மேற்பட்டோர் இறந்ததுடன், ஏறத்தாழ 20,000 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் வன்முறை அதிகரித்த நிலையில் பிரதமர் அடெல் அப்டெல் மஹ்டி இராஜினாமா செய்திருந்தார்.

அந்தவகையில், பிரதியீடொன்றைக் கண்டுபிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் தீவிரமாகியியிருந்த நிலையில், அவற்றில் ஈராக்கின் பிரதான ஷியா கட்சிகளின் முக்கியமான இரண்டு நட்புறவாளர்களான ஈரானின் புரட்சிகர காவலர்களின் தளபதி மேஜர் ஜெனரல் குவாசிம் சொலெய்மானி, லெபனானிய பேரம்பேசுநர் மொஹமட் கவ்தாரிணி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக உயர் மட்ட அரசியல் தகவல் மூலமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அப்டெல் மஹ்டிக்கு அடுத்ததாக குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை பிரதமராக்குவதை முன்னெடுப்பதற்காகவே குவாசிம் சொலெய்மானி பக்தாத்தில் இருப்பதாக குறித்த தகவல்மூலம் கூறியுள்ளது. இதேவேளை, குறித்த நகர்வில் ஷியா, சுன்னி அரசியல் சக்திகளை நகர்த்துவதற்காக லெபனான் ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லாவின் ஈராக்குக்கான நபரான மொஹமட் கவ்தாரிணியும் பெரும் பணியாற்றுவதாக குறித்த தகவல் மூலம் மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .