2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஈரானால் வளைகுடாவில் பதற்றம் வருமா?

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சில நாட்களில், வளைகுடாப் பகுதியில், பாரிய இராணுவ நடவடிக்கை அல்லது பயிற்சி ஒன்றை மேற்கொள்வதற்கு ஈரான் தயாராகி வருகிறது என, ஐக்கிய அமெரிக்க இராணுவத் தரப்புத் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, வளைகுடாப் பகுதியில் பதற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளதெனக் கருதப்படுகிறது.

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில், ஈரானின் அணுவாயுதம் தொடர்பாகக் கையெழுத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐ.அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்கா மீது, கடுமையாக கோபத்தில் ஈரான் உள்ளது.

அதேபோல், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்பதற்கான அல்லது இறுக்குவதற்கான முயற்சிகளை, ஐ.அமெரிக்கா மேற்கொள்கிறது எனக் குற்றஞ்சாட்டும் ஈரான், அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறுகிறது.

இந்நிலையிலேயே, ஈரானின் இராணுவப் படையணிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என, ஐ.அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரேபிய வளைகுடா, ஹோர்மஸ் நீரிணைப்புப் பகுதி, ஓமானிய வளைகுடா ஆகிய பகுதிகளில், ஈரான் கடற்படையின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கண்காணிப்புகளைத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அத்தரப்பு, தமது இணை நாடுகளுடன் இணைந்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டது.

ஆனால், என்னவாறான பயிற்சி நடவடிக்கை இடம்பெறலாம் என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X