2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈரானின் விசேட படையினர் மீது தற்கொலைத் தாக்குதல்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஈரானின் விசேட படைப் பிரிவினரான புரட்சிகரக் காவல் படையினர் மீது, தற்கொலைக் குண்டுதாரியொருவர் நடத்திய தாக்குதலில், படையினரில் 27 பேர் கொல்லப்பட்டனர் என, ஈரான் அரச ஊடகம் இன்று (14) தெரிவித்தது. நேற்று  (13) நடத்தப்பட்ட இத்தாக்குதல், தென்கிழக்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பிராந்தியத்தின், சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடல் (நீதிக்கான இராணுவம்) என்ற ஆயுதக்குழு, புரட்சிகரக் காவல் படையினர் மீது, அண்மைக்காலத்தில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் சிறுபான்மையினரான உள்ள சுன்னி முஸ்லிம்களின் பிரிவினரான பலோச் மக்களுக்கான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர்களுக்கான அதிகரித்த உரிமைகள் வேண்டுமெனவும், இவ்வாயுததாரிகள் கோருகின்றனர்.

இவர்களின் அண்மைக்காலத் தாக்குதல்கள் பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்த்திருக்காவிட்டாலும், அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்திய இத்தாக்குதல், அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

வெடிபொருட்கள் நிரம்பிய வாகனமொன்றைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரி, புரட்சிகரக் காவல் படையினரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது வெடிப்பை ஏற்படுத்தினாரென அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட 27 பேருக்கு மேலதிகமாக, 13 பேர் காயமடைந்தனர்

இத்தாக்குதல் நடத்தப்பட்ட பிராந்தியம், பாகிஸ்தான் எல்லைக்கு அண்மையாகக் காணப்படுவதோடு. இந்த ஆயுதக்குழு, பாகிஸ்தானிலும் இயங்குவதாகக் கருதப்படும் நிலையில், இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் புரட்கிகரக் காவல் படையினர் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்லாமியப் புரட்சியைப் பாதுகாப்பதற்கான எமது நடவடிக்கை, எமது எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட மாட்டாது" எனத் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .