2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஈரானில் 208 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது’

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் கடந்த மாதம் எரிபொருள் விலையுயர்வொன்றைத் தொடர்ந் ஆர்ப்பாட்டங்கள் மீதான அடக்குமுறையில் குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக நேற்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 15ஆம் திகதி வெடித்த ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தமக்கு கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த அறிக்கைகளின் அடிப்படையில் குறைந்தது 208ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை, உண்மையான உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

அந்தவகையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது ஏறத்தாழ 50ஆல் அதிகரித்துள்ளது.

தெஹ்ரான் மாகாணத்தின் ஷாரியார் நகரத்தில் டசிக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, மிக அதிகமாக கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையைக் கொண்ட ஒரு நகரமாக குறித்த நகரம் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊடகங்களுடன் கதைக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அச்சுற்றுத்தல், எச்சரிக்கைக்கு உள்ளானதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .