2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஈரானில் COVID-19-ஆலான உயிரிழப்புகள் 2,234 ஆக உயர்ந்தது

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் புதிதாக 157 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் பேச்சாளர் கியனுஷ் ஜஹன்பூர் அந்நாட்டு அரச தொலைக்காட்சிக்கு இன்று தெரிவித்துள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் தொற்றுக்குள்ளான 29,406 பேருடன், COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,234-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 2,389 பேர் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றுக்குள்ளானதாக கியனுஷ் ஜஹன்பூர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .