2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஈரான் சண்டையிட விரும்பினால் ‘அது ஈரானின் உத்தியோகபூர்வ முடிவு’

Editorial   / 2019 மே 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஈரான் சண்டையிட விரும்பினால், அது ஈரானின் உத்தியோகபூர்வ முடிவு. ஒருபோதும் ஐக்கிய அமெரிக்காவை மீண்டும் மிரட்டாதீர்கள்” என டுவீட்டொன்றில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மிரட்டல்கள் எனத் தெரிவித்து விமானந் தாங்கிக் கப்பல் குழுவொன்றையும், பி-52 குண்டுவீச்சு விமானங்களையும் அரேபிய வளைகுடாவுக்கு ஐக்கிய அமெரிக்கா அனுப்பியதிலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமிடையிலான பதற்றங்கள் அதிகரித்ததாகக் காணப்படும் நிலையிலேயே ஜனாதிபதி ட்ரம்பின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமது பரம வைரியான ஈரானை எவ்வளவு கடுமையாகத் தண்டிப்பது என்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்பின் அமைச்சரைவுக்குள் முரண்பாடுகள் காணப்படுவதாக பல ஐக்கிய அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்ற நிலையில், அண்மைய நாட்களில் முரணான சமிக்ஞைகளை ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம் வழங்கியிருந்தது.

ஐக்கிய அமெரிக்க ஊடகங்களின் அறிக்கைகளின்படி, ஈரான் மீது கடுமையான நிலைப்பாடொன்றை எடுக்கும் பிரயத்தனங்களை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் முன்னெடுக்கையில், ஜனாதிபதி ட்ரம்பின் அமைச்சரவையிலுள்ள ஏனையோ அதைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஈராக்கிய ஆயுதக் குழுக்களிடமிருந்தான அச்சுறுத்தல்களை மேற்கோள்காட்டி, ஈராக்கிலுள்ள அவசியமற்ற இராஜதந்திர அதிகாரிகளை வெளியேற ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், ஈராக்கின் ஐக்கிய அமெரிக்கத் தூதரகமும் அந்நாட்டு அரசாங்க அலுவலகங்களும், தூதரகங்களும் உள்ளடங்குகின்ற அந்நாட்டின் தலைநகர் பக்தாத்தின் பச்சை வலயத்தின் மீது கட்யுஷா றொக்கெட்டொன்று நேற்று முன்தினம் ஏவப்பட்டிருந்தது. குறித்த தாக்குதலுக்கு பின்னர் யார் உள்ளார்கள் என உடனடியாகத் தெரியவந்திருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X