2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘உக்ரேனிய விசாரணையை பற்றி வினவினார் ட்ரம்ப்’

Editorial   / 2019 நவம்பர் 14 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் குறித்த உக்ரேனிய விசாரணையொன்றைப் பற்றி ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக வினவியதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிநீக்க விசாரணைகளின்போது உக்ரேனுக்கான ஐக்கிய அமெரிக்காவின் பதில் தூதுவர் பில் டெய்லர் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜனநாயகக் கட்சி போட்டியாளராக இருப்பார் எனக் கருத்தப்படும் ஜோ பைடன் தொடர்பாக விசாரணையொன்றுக்கு அழுத்தமளிக்கும் ஈடுபாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருந்ததாக தனது பணியாளரொருவர் தெரிவித்ததாக பில் டெய்லர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி விலக்கும் விசாரணையின் முதலாவது பொதுவெளி விசாரணையின்போதே மேற்குறித்த விடயத்தை பில் டெய்லர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மேற்குறிப்பிட்டவாறு கருத்துகளைக் கூறியதாக ஞாபகம் இல்லை என செய்தியாளர்களிடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் மீது மோசடி விசாரணையொன்றை பொதுவெளியில் அறிவிக்குமாறு உக்ரேனின் ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸ்கிக்கு அழுத்தம் வழங்கும் வகையில், உக்ரேனுக்கான ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ உதவியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தி வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X