2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உடற்பயிற்சி தண்டனையையடுத்து கொவிட்-19 விதியை மீறியவர் இறப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவரொருவர், பொலிஸாரால் தண்டனையாக 300 இருந்தியெழும்புவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வைத்ததையடுத்து இறந்துள்ளதாக அந்நபரின் குடும்பம் தெரிவித்துள்ளது.

கவிட்டே மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி ஆறு மணிக்குப் பின்னர் தண்ணீர் வாங்குவதற்காக கடந்த வியாழக்கிழமை சென்ற குறித்த நபர் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மறுநாள் நிலைகுலைந்து வீழ்ந்த குறித்த நபர் பின்னர் இறந்துள்ளார்.

லுஸோன் தீவிலுள்ள கவிட்டே மாகாணமானது தற்போது கடுமையான முடக்கத்தின் கீழ், கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக காணப்படுகின்றது.

குறித்த நபரும், வேறு ஆட்களும் ஊரடங்கை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 100 இருந்தியெழும்புவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய பணிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர்கள் ஒரேநேரத்தில் உடற்பயிற்சிகளை செய்யாத நிலையில், அவர்கள் மீண்டும் செய்து இவர்கள் 300 தடவைகள் உடற்பயிற்சிகளை செய்துள்ளனர்.

அந்தவகையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வலியில் சென்ற குறித்த நபர், அன்று நடமாடுவதற்கு சிரமப்பட்டு, அடுத்த நாள் நிலைகுலைந்து வீழ்ந்து இறந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .