2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதத்தை கைவிட்டார் நளினி

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை  அனுபவித்து வரும் முருகனும் அவரது மனைவி நளினியும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் 10 நாள்களாக முன்னெடுத்திருந்த உண்ணாவிரதத்தை நளினி இன்று நிறை​வு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
முருகனின் அறையில் அலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் தனி சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் அவருக்கு வழங்கியக சலுகைகளும் இரத்து செய்யப்பட்டன. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.

நளினியின் 10 நாள்கள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருக்கின்றபோதிலும், முருகன் தொடர் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .