2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உப ஜனாதிபதியைப் புறக்கணிக்கிறார் ஜனாதிபதி

Editorial   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கிகரித்தமையைத் தொடர்ந்து, இம்மாற்றத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு கோரியுள்ள ஃபட்டா அமைப்பு, இம்மாத இறுதியில் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸை, தமது அமைப்பின் தலைவரும் பலஸ்தீன ஜனாதிபதியுமான மஹ்மூட் அப்பாஸ் சந்திக்க மாட்டார் எனவும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, மேற்குக் கரையிலும் காஸாவிலும், மூன்றாவது தொடர்ச்சியான நாளாக, ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் வெளிப்படுத்தப்பட்டன.

இஸ்‌ரேலியப் படையினர் மீது கற்களை வீசி பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த, கண்ணீர்ப்புகைக் குண்டு, இறப்பர் குண்டுகள், உண்மையான குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இஸ்‌ரேலியப் படையினர் பதிலடி நடத்தினர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக, குறைந்தது 4 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், யாசீர் அரபாத்தால் நிறுவப்பட்ட ஃபட்டா அமைப்பின் தலைவரான மஹ்மூட் அப்பாஸ், பலஸ்தீனத்தின் ஜனாதிபதியாக உள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் இவ்வறிவிப்புக்கான உத்தியோகபூர்வ எதிர்ப்பை, அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

மேற்குக் கரையில் இஸ்‌ரேலிய இராணுவம் காணப்படும் புள்ளிகளிலெல்லாம், தொடர்ச்சியான எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கோரியுள்ள ஃபட்டா, இவ்விடயத்தில் முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

அதேபோல, ஜனாதிபதி அப்பாஸின் நிலைப்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவரது இராஜதந்திர ஆலோசகர் மஜ்டி அல்கல்டி, “ஐக்கிய அமெரிக்காவின் உப ஜனாதிபதியுடன், பலஸ்தீனத்தில் எவ்விதமான சந்திப்புகளும் இடம்பெறாது” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .