2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘உயிரியல் வயோதிபத்தை வெற்றிகரமாக நிறுத்தினோம்’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயிரியல் வயோதிப நடைமுறையை வெற்றிகரமாக நிறுத்தியது மட்டுமல்லாமல், ஒட்சிசனை மட்டும் பயன்படுத்தி பின்னோக்கி நகர்த்தியுள்ளதாக இஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

டெல் அவிவ் பல்கலைக்கழகம், ஷமிர் மருத்துவ நிலையத்தின் கூட்டிணைவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்வில் உயர் அழுத்த ஒட்சிசனை, அமுக்கத்திலுள்ள இடத்துக்குள் செலுத்துவதன் மூலம் வயோதிபம் மற்றும் நோயுடன் தொடர்புடையை இரண்டு நடைமுறைகளை பின்னகர்த்த முடிந்துள்ளது.

64 வயதுக்கு மேற்பட்ட 35 பேர் குறித்த ஆராய்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். இவர்களுக்கு மேற்குறித்தவாறாக நாளொன்றுக்கு 90 நிமிடங்களுக்கு வாரமொன்றில் ஐந்து தடவைகள் மூன்று மாதங்களுக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அவர்களது உடல்களில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்று பெளதிக மாற்றங்கள் இருந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X