2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உரிமை கோரியது ஆயுதக்குழு

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ மீதான தாக்குதலுக்கு உரிமை கோருவதாக, படைவீரர்களுக்கான தேசிய இயக்கம் என்ற குழு அறிவித்துள்ளது. பொதுமக்களும் இராணுவத்தினரும் இணைந்த எதிரணிக் குழுவாக இது கருதப்படுகிறது.

இது தொடர்பான தங்கள் அறிக்கையை, தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசித்துவரும், வெனிசுவேலாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு, அக்குழு அனுப்பிவைத்திருந்தது.

அதன்போது, “அரசமைப்பை மறந்தது மாத்திரமன்றி, அரச பொறுப்பைப் பயன்படுத்தி, மிக அதிகமானளவில் செல்வந்தர்களாக வந்தவர்களுக்கு இராணுவ கௌரவம் வழங்குவது முரணானது” என, அக்குழு தெரிவித்தது.

நாட்டின் சனத்தொகையை, பட்டினியாலும் மருந்தின்றியும் மதிப்பற்ற பணத்துடனும் வருந்தும் போது, அதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அக்குழு, நாட்டின் கல்வித் துறை, எதையும் கற்றுக் கொடுப்பதில்லை எனவும், கொம்யூனிஸத்தைத் திணிப்பதிலேயே கவனஞ்செலுத்துகிறது எனவும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .