2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடுருவ முயன்றதையடுத்து ‘300 போராளிகள் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாட்டின் வடக்கில் எட்டு நாள்களுக்கு முன்னர் பாரிய ஊடுருவல் ஒன்றை மேற்கொண்ட 300 போராளிகளைக் கொன்றதாக இன்று தெரிவித்துள்ள சாட் இராணுவம், தாம் ஐந்து படைவீரர்களை இழந்துள்ளதாகக் கூறியுள்ளது.

சாட் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்ற இம்மாதம் 11ஆம் திகதி, லிபியாவிலுள்ள தமது முன்னரங்கிலிருந்து கடுமையாக ஆயுதந்தரித்த சாட்டில் மாற்றம் மற்றும் இயைபுக்கான முனை (எஃப்.ஏ.சி.டி) தாக்குதலொன்றை முன்னெடுத்தது.

இந்நிலையில், நேற்று முன்தின மோதலில் 36 படைவீரர்கள் காயமடைந்ததாகவும், மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 150 போராளிகள் சிறைபிடிக்கப்பட்டதாக, இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அஸெம் பெர்மன்டோ அகெளனா தெரிவித்துள்ளார்.

திபெஸ்டி, கனெம் மாகாணங்களில் போராளிகளின் வலிந்த தாக்குதலானது முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X