2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊழல் குற்றம்; Samsung தலைவருக்கு சிறை

J.A. George   / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான Samsung நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-yong) ஊழல் குற்றத்துக்காக இன்று(18) இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்த, நீண்ட நாள்களாக நீடித்த வழக்கு, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

லீயின் தந்தை, சென்ற ஆண்டு இதய நோயால் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சொத்துகள் அவரது வாரிசுகளின்கீழ் வந்தன. வாரிசுரிமைச் சட்டப்படி, மூத்த  லீயின் சொத்துகளைப் பெறுவதற்குப் பெருந்தொகையை வாரிசு வரியாகச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக லீ, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பு, சாம்சுங் நிறுவனத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .