2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எல்லைச் சுவர் தொடர்பில் ஐ.அமெரிக்க இராணுவம் உறுதியில்லை

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையிலான எல்லையில், எல்லைச் சுவரொன்றை அமைப்பது இராணுவத்துக்கான அவசிய தேவையா என்பது குறித்தும் அவ்வாறு அதை அமைப்பதாயின் எவ்வளவு செலவுசெய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் இன்னமும் தீர்மானிக்கவில்லை என, ஐ.அமெரிக்காவின் பதில் பாதுகாப்புச் செயலாளர் பட்ரிக் ஷனஹன் தெரிவித்துள்ளார்.

குறித்த எல்லைச் சுவரை அமைப்பதற்கு, காங்கிரஸிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிய நிதியளிப்பை வழங்குவதற்குக் காங்கிரஸ் மறுத்துவிட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, தேசிய அவசரகால நிலையை, ஜனாதிபதி ட்ரம்ப் பிரகடனப்படுத்தியிருந்தார். இதன் மூலம், இராணுவத்தின் நிர்மாணத் தேவைகளுக்கான பணத்தை, சுவரை அமைக்கப் பயன்படுத்த முடியும்.

எனினும், அதற்கான அனுமதியை, பாதுகாப்புச் செயலாளர் தான் வழங்க முடியும்.

இந்நிலையிலேயே அவர், இது தொடர்பில் அதிக கவனம் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்தார். அத்தோடு, இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புச் செயலாளரை, செனட்டின் அனுமதியுடன் ஜனாதிபதியே நியமிக்க வேண்டுமென்ற நிலையில், ஜனாதிபதியுடன் ஒத்துழைப்பதற்கு ஷனஹன் மறுத்தால், நிரந்தரமான பாதுகாப்புச் செயலாளரொருவரை, ஜனாதிபதி ட்ரம்ப் விரைவில் நியமிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியொருவர், இராணுவத்தின் நிர்மாண நிதியிலிருந்து 3.6 பில்லியன் ஐ.அமெரிக்க டொலரை, எல்லைச் சுவர் நிர்மாணத்துக்காக ஷனஹன் வழங்குவாரென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, பாதுகாப்புத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புக்காக ஒதுக்கப்பட்ட 2.5 பில்லியன் ஐ.அமெரிக்க டொலரும், எல்லைச் சுவர் நிர்மாணத்துக்காகப் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X