2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’எல்லைப் பொலிஸார் 50 பேரை கைப்பற்றினர் தலிபான்கள்’

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகணமான பட்ஜ்ஹிஸ்ஸின் கட்டுப்பாட்டுக்கான மோதலொன்றில், தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் குறைந்தது 50 உறுப்பினர்கள் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தலிபானும், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளும் கடந்த செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டிருந்தபோதும் ஆப்கானிஸ்தானில் மோதல் தீவிரமடைந்திருந்தது.

இந்நிலையில், உள்நாட்டமைச்சின் எல்லைப் பொலிஸாரின் 100 பேர், தங்களது நிலைகளிலிருந்து, அயலிலுள்ள துர்க்மெனிஸ்தானுக்கு செல்ல முயன்றதாகவும் ஆனால், துர்க்மெனிஸ்தானுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் பட்ஜ்ஹிஸ் மாகாண சபையின் தலைவர் அப்துல் அஸீஸ் பிக், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரில் 50 பேரளவானோர் சரணடைந்ததாகவும், எஞ்சியுள்ள 50 பேர். பாலா முர்கஹாம் மாவட்டத்தில் தொடர்ந்து போரிடுவதாகவும் அப்துல் அஸீஸ் பிக் மேலும் கூறியுள்ளார்.

வான், தரையுதவிகளை ஆப்கானிஸ்தான் படைகள் பெறாவிட்டால் பட்ஜ்ஹிஸ் மாகாணத்தின் சனத்தொகை கூடிய மாவட்டமான பாலா முர்கஹாமானது தலிபான்களிடம் வீழ்ச்சியடையும் அபாயத்திலுள்ளது என குறித்த மாகாண சபை உறுப்பினரொருவரான அப்துல்லா அஃப்ஸலி, கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தம்மிடம் எல்லைப் பொலிஸார் 90 பேர் சரணடைந்துள்ளதாகவும் மேலும் பலரைக் கொன்றுள்ளதாக தலிபான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவப் படைகளிடம் 20 படைவீரர்களின் சடலங்களைக் கையளிக்க தாங்கள் உதவியதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், பால முர்கஹாப்பில் தமது படைகள் தலிபான்கள் 12 பேரைக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .