2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏர்டோவானும் சவூதித் தலைவர்களும் கலந்துரையாடினர்

Editorial   / 2017 ஜூன் 22 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவின் அரசர் சல்மானுடனும் சவூதி அரேபியாவின் புதிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடனும் தொலைபேசியில் துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவான் உரையாடியதோடு, கட்டார் தொடர்பான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைளை அதிகரிக்க அவர்கள் இணங்கியதாக, ஜனாதிபதி ஏர்டோவானின் அலுவலகத்திலுள்ள தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.   

சவூதித் தலைவர்களுடன், ஜனாதிபதி ஏர்டோவான், நேற்று  (21) மாலையில் கதைத்ததாகவும், கட்டார் தொடர்பான பதற்றத்தை, பிராந்தியத்தில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டதாக, அறிக்கையொன்றில் தகவல் மூலம் தெரிவித்துள்ளது.   

இதேவேளை, புதிதாக, முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்ட மொஹமட் பின் சல்மானுக்கு வாழ்த்துகளை ஜனாதிபதி ஏர்டோவான் தெரிவித்திருந்த நிலையில், துருக்கி, சவூதி அரேபியா உறவுகளைப் பலப்படுத்துவதில் தலைவர்கள் உறுதி பூண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   
இந்நிலையில், ஜேர்மனியின் ஹம்பேர்க்கில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜி-20 மாநாட்டின்போது, ஜனாதிபதி ஏர்டோவானும் அரசர் சல்மானும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியதாக, தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.   

பயங்கரவாதத்துக்கு, கட்டார் நிதியளிக்கிறது எனக் குற்றஞ்சாட்டி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேய்ன், எகிப்து உள்ளிட்ட சில நாடுகள், கட்டாரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டமையைத் தொடர்ந்து, கட்டாருக்கான பலமான ஆதரவை துருக்கி வழங்கியிருந்தது.   

கட்டாருடனான தொடர்புகளை, வளைகுடா நாடுகள் துண்டித்த இரண்டு நாட்களில், இம்மாதம் ஏழாம் திகதி, கட்டாரிலுள்ள இராணுவத் தளமொன்றுக்கு, படைகளைத் தரையிறக்குவதற்கான சட்டமூலத்தை, துருக்கி நாடாளுமன்றம் நிறைவேற்றியிருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .