2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ. அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இலங்கை நேரப்படி இன்று காலை 8.55 மணி வரையில் 5,014,339ஆகக் காணப்பட்டிருந்ததுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 162,105ஆகக் காணப்பட்டிருந்தது.

அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவில் 66 பேரில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

பிரேஸில் சுகாதாரமைச்சானது கடந்த 24 மணித்தியாலங்களில் 49,970 புதிய கொவிட்-19 தொற்றுக்களையும், 905 புதிய கொவிட்-19-ஆலான உயிரிழப்புகளையும் நேற்று  பதிவுசெய்த நிலையில், அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 100,477ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இன்று காலை எட்டு மணி வரையில் 64,399-ஆல் அதிகரித்து 2,153,010ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 861-ஆல் உயர்ந்து 43,379ஆகக் காணப்படுகிறது.

ரஷ்யாவானது இன்று புதிதாக 5,189 கொவிட்-19 தொற்றுக்களைபதிவுசெய்த நிலையில் அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 887,536ஆக அதிகரித்ததுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது கடந்த 24 மணித்தியாலங்களில் 77-ஆல் அதிகரித்ததாக அந்நாட்டு கொவிட்-19 செயலணி தெரிவித்த நிலையில் அங்கு கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 14,931-ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 20 மில்லியனை நெருங்குவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 727,000ஐத் தாண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .