2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஐ. அமீரக சிறைகளில் பாரியளவில் சித்திரவதை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் யேமனில், ஐக்கிய அரபு அமீரகத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்படுபவர்கள், உடல், உள ரீதியான சித்திரவைகள் உட்பட மோசமான விசாரணை முறைமைகளை எதிர்கொள்வதாக தாம் பெற்றுள்ள அறிக்கையொன்று வெளிப்படுத்துவதாக அல் ஜஸீரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

யேமனின் ஹூதிப் போராளிகளுடன் போரிடும் சவூதி அரேபிய, ஐக்கிய அரபு அமீரகக் கூட்டணியுடன் பணியாற்றும் யேமனிய இராணுவ அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, ஐக்கிய அரபு அமீரக இராணுவத்தினராலும் அவர்களது யேமனிய விசாரணையாளர்களாலும் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்துகின்றது.

தனிநபர்கள் கூட்டணிப் படைகளால் வன்புணரப்படுவதாகவும் பிறப்புறுப்பு, நெஞ்சு, அக்குளில் மின்சாரம் பாய்ச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, சில தடுத்து வைக்கப்பட்டோர் கட்டித் தொங்கவிடப்பட்டு அடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை அமர்வுகளின்போது மின் வயர்களும் மரப் பொல்லுகளும் இரும்புப் பொல்லுகளும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், தடுத்து வைக்கப்பட்டவர்கள் நித்திரை கொள்ள அனுமதிக்கப்படாது, குறுகிய இடங்களில் மோசமான சுகாதார நிலைமகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட காற்றோட்டத்திலும் அடைத்து வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சிலருக்கு, அடித்து தோல்கள் கிழிக்கப்பட்டு அவர்களின் காயங்களுக்கு உப்பு இடப்பட்டுள்ளதுடன் விரல்களில் ஆணிகள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில், சித்திரவதை காரணமாக 49 பேர் இறந்ததாகக் குறிப்பிடுகின்ற குறித்த அறிக்கை, இறந்தவர்களைப் புதைப்பதற்கு ஐந்து புதைகுழிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.

குறித்த அறிக்கையின்படி, ஹட்ராமெளன்ட், ஏடன், ஸொகொட்ரா, மயுன் தீவு, ஐக்கிய அரபு அமீரகத்தின் இராணுவத் தளமொன்று அமைந்துள்ள எரித்திரியா உள்ளிட்ட இடங்களில் 27 இரகசியச் சிறைச்சாலைகள் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .