2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ. அமெரிக்க ஆதரவு சிரியப் படைகள் முன்னேறுகின்றன

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதி இடத்தைக் கைப்பற்றுவதற்கான கடும் மோதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இடத்தை ஐக்கிய அமெரிக்கால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் கைப்பற்றியுள்ளதாக சிரிய ஜனநாயகப் படைகளின் ஊடக அலுவலத்தின் தலைவர் முஸ்தபா அலி நேற்றுத் தெரிவித்துள்ளார்.

தாம் செயற்படும் வட, கிழக்கு சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதியிடங்களை துடைத்தழிக்கும் நோக்கத்தோடான தாக்குதலை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால் ஆதரிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்திருந்தன.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் குறித்த இடமானது, ஈராக்கிய எல்லைகருகில் இருப்பதுடன் இரண்டு கிராமங்களைக் கொண்டுள்ளது. இதுதவிர, ரஷ்ய, ஈரானிய ஆதரவுடனான சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் பெரும்பாலாக இருக்கும் சிரியாவின் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இன்னும் காணப்படுகிறது.

இந்நிலையில், 41 நிலைகளை இதுவரையில் சிரிய ஜனநாயகப் படைப் போராளிகள் கைப்பற்றியுள்ளதாகவும் நேற்று  அதிகாலையில் பதில் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும அவை முறியடிக்கப்பட்டதாகவும் முஸ்தபா பாலி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் குறித்த இறுதி இடத்தில் இல்லை என முஸ்தபா அலி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈராக்கி எல்லைப் பக்கமாகத் தப்பிச் செல்லும் எந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகளை தாக்குவதற்கு தயாராக கூட்டணியின் பிரெஞ்சு அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .