2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ஐ. அமெரிக்க ஒப்பந்தக்காரர்களுள்ள தளத்தின் மீது றொக்கெட் தாக்குதல்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக்கின் தலைநகர் பக்தாத்துக்கு வடக்காக பலாட்டிலுள்ள ஈராக்கிய இராணுவ வான் தளத்தை சில றொக்கெட்டுகள் நேற்று தாக்கியதாகவும், ஈராக்கிய ஒப்பந்தகாரரொருவர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு எக்குழுவும் உடனடியாக உரிமை கோரியிருக்கவில்லை.

தளத்தை நான்கு றொக்கெட்டுகள் தாக்கியதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது. மூன்று றொக்கெட்டுகள் தாக்கியதாகத் தெரிவித்த ஈராக்கிய பாதுகாப்பு அதிகாரிகள், ஒப்பந்தகாரர் ஆபத்தில்லாத காயமடைந்ததாகக் கூறியுள்ளனர்.

ஊடகத்துடன் உரையாட அனுமதியில்லாததால் அடையாளந்தெரியாமலே குறித்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .