2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ. அமெரிக்கா – தாய்வானிடையேயான உறவு: கட்டுப்பாட்டை நீக்கிய பொம்பயோ

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 10 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள், தாய்வான் அதிகாரிகளுக்கிடையேயான தொடர்பாடல்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதாக ஐ. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ நேற்றுத் தெரிவித்துள்ளார்.

குறித்த நகர்வானது சீனாவைக் கோபப்படுத்தும் என்பதோடு, சீனாவுக்கும், ஐ. அமெரிக்காவுக்குகுமிட்டையிலான பதற்றங்களை ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இறுதி நாள்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்வானை உரிமை கோருகின்ற சீனாவானது, தனது பிராந்தியமாக தனியாக ஆண்டு வருகின்றது. இந்நிலையில், பெரும்பாலான நாடுகளைப் போல தாய்வானுடன் எந்தவித உத்தியோகபூர்வமான உறவுகளை ஐ. அமெரிக்கா கொண்டிருக்கவில்லை.

எனினும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகமானது தாய்வானை ஆதரிப்பதை ஆயுத விற்பனைகள், சீனாவிலிருந்தான அழுத்தத்தை சமாளிப்பதற்கான சட்டங்கள் மூலம் உதவி தாய்வானை ஆதரித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .