2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.அமெரிக்காவின் முன்னணி 20 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல், ஜிஎஸ்டி அமுல்படுத்தப்படவுள்ளமையால், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர ​மோடி வலியுறுத்தியுள்ளார்.  

போர்த்துக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் (25) இரவு, ஐ.அமெரிக்காவிலுள்ள முன்னணி 20 நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளைச் சந்தித்தார். இதன்போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். 

இந்தச் சந்திப்பில், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அப்பிள் நிறுவனத்தின் டிம் குக், அமேசான் நிவனத்தின் ஜெஃப் பெசோஸ், சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ், மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் சட்ய நடெல்லா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  

“வணிக நட்பை இலக்காகக் கொண்டு, இந்தியா செயற்பட்டு வருகின்றது. கடந்த 3 வருடங்களாக, தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சியின் மூலம், இந்தியா, பல்வேறு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு, எதிர்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு, இந்தியா எதிர்பார்த்துள்ளது” என்று அவர் கூறினார்.  

‘வெற்றி-வெற்றி’ கூட்டாண்மையின் அடிப்படையிலேயே, இந்தியா வளர்ச்சியடைந்து வருகின்றது என்றும் இதன்மூலம், ஐக்கிய அமெரிக்காவும் அமெரிக்க நிறுவனங்களும் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவர் கூறியுள்ளார்.  

மேலும், அமுல்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.டி, அமெரிக்காவின் வணிக பாடசாலைகளில் ஆய்வுக்குட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X