2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஐ.அமெரிக்காவுக்கு எதிரான போரில் வெல்வோம்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவில் முன்னேற்ற மடைந்துவரும் அணுவாயுதங்களின் துணையோடு, ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான போரை வெல்லவுள்ளதாக, வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் எச்சரித்துள்ளார்.

தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அணுவாயுதச் சோதனைகள் காரணமாக, வடகொரியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் இறுதி ஏவுகணைச் சோதனை மூலமாக, ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துப் பிராந்தியங்களையும் தாக்க முடியுமென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதி ஏவுகணைச் சோதனைக்குப் பக்கபலமாக இருந்த பணியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்த கிம் ஜொங்-உன், பலமான அணுவாயுதச் சக்தியாக வடகொரியா மாறுமெனக் குறிப்பிட்ட அவர், உலகின் மாபெரும் இராணுவ சக்தியாகவும் மாறுமெனக் குறிப்பிட்டாரென, அரச ஊடகம் நேற்று (13) தெரிவித்தது.

“தேசிய பாதுகாப்புத் தொழிற்றுறை, தொடர்ந்தும் விருத்தியடைந்து வரும். ஏகாதிபத்திய வாதிகளுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் ஏற்படும் மோதலில், நாம் வெற்றிபெறுவோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமது நாட்டின் அணுவாயுத விருத்தி என்பது, பல சவால்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்படுகிறது என, அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .