2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.அமெரிக்காவுக்கு ’சுடுகாடாக மாறும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான கொள்கை அறிவிப்பை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்ததைத் தொடர்ந்து, ஐ.அமெரிக்காவுக்கான எச்சரிக்கையை, தலிபான் குழு விடுத்துள்ளது.
"ஆப்கானிஸ்தானிலுள்ள தனது துருப்புகளை ஐ.அமெரிக்கா வாபஸ் பெறாவிட்டால், இந்த வல்லரசுக்கு, 21ஆம் நூற்றாண்டில், மற்றொரு சுடுகாடாக ஆப்கானிஸ்தான் விரைவில் மாறும்" என, தலிபான்கள் சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், அக்குழுவின் பேச்சாளர்களில் ஒருவரான ஸபியுல்லா முஜாஹிட் தெரிவித்தார்.
போரைத் தொடர்வதை விடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான திட்டம் குறித்து, ஐ.அமெரிக்கா சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எங்கள் மண்ணில், ஐ.அமெரிக்காவின் ஒரு படை வீரர் உள்ள வரையில், எங்கள் மீது அவர்கள், போரைத் திணித்துக் கொண்டிருப்பர். உயர் மனத்துடன் நாங்கள், அதற்கெதிரான ஜிஹாத்தைத் தொடர்வோம்" என்று, முஜாஹிட் குறிப்பிட்டார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட தலிபான் தளபதியொருவர், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் போன்றோர் போன்று, "திமிர்த்தனமான நடத்தையை", ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று தெரிவித்தார்.
"அமெரிக்கப் படையினரை, அவர் வீணாக்கிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய நாட்டை எவ்வாறு காப்பது என்று எங்களுக்குத் தெரியும். இந்த அறிவிப்பு, எதையும் மாற்றாது.
"பல தலைமுறைகளாக, இந்தப் போரை நாங்கள் போரிட்டு வந்தோம். எங்களுக்குப் பயம் கிடையாது; நாங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறோம்; எங்கள் இறுதி மூச்சு வரை, இந்தப் போரைத் தொடர்வோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .