2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஐ. அமெரிக்காவுடன் பேச்சுக்களில் பங்கேற்பதற்கான எவ்வித நோக்கமுமில்லை’

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவுடன் பேச்சுக்களில் பங்கேற்கும் எவ்வித நோக்கமுமில்லை எனவும், தலையிடுவதை நிறுத்துமாறும் தென்கொரியாவுக்கு அறிக்கையொன்றில் இன்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவுடனான தடைப்பட்ட அணுப்பேச்சுக்களை மீளப்புதுப்பிக்கும் நடவடிக்கையாக தென்கொரியாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ஸ்டீபன் பைகன் இன்று சென்றுள்ளார்.

தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு தெற்காகவுள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தளமொன்றில் வடகொரியாவுடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்த ஸ்டீபன் பைகன் தரையிறங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவர் நாளையும், நாளை மறுதினமும் தென்கொரிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

வடகொரியாவின் அணுத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நம்பிக்கைகளை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் சந்தித்தபோதும், இவர்களின் கடந்தாண்டு வியட்நாம் சந்திப்பும், அதைத் தொடர்ந்த பேச்சுக்களும் முறிவடைந்திருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .