2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஐ.எஸ்-ஐ தோற்கடிப்பதை நெருங்குகிறோம்’

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதியிடமான பக்கூஸில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை தோற்கடிப்பதை நெருங்குவதாக, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவித்துள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் முகாமொன்றை நேற்று முன்தினம் கைப்பற்றியதைத் தொடர்ந்தே குறித்த கருத்தை சிரிய ஜனநாயகப் படைகள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மோதல் தொடர்ந்தும் இடம்பெறுவதாகத் தெரிவித்த சிரிய ஜனநாயகப் படைகளின் ஊடக அதிகாரியொருவரான முஸ்தஃபா பாலி, சில இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகள் இருப்பதாவும் ஆனால் அவர்களின் பிரசன்னம் குறிப்பிட்டு வரையறுக்கக்கூடிய இடமொன்றில் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, மேற்கூறப்பட்ட முகாமைக் கைப்பற்றும்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் காயமடைந்த ஆயுததாரிகள் நூற்றுக்கணக்கானோரை தாம் கைப்பற்றியதாக முஸ்தஃபா பாலி மேலும் தெரிவித்துள்ளார். இதுதவிர, பெரும்பாலான வெளிநாட்டு ஆயுததாரிகள் உள்ளடங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் 157 பேரையும் சிரிய ஜனநாயகப் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட முகாமைச் சூழக் காணப்பட்ட டசின் கணக்கான மக்கள், ட்ரக் தொடரணியொன்றில் வெளியேறுவதற்காக தமது உடமைகளைத் தயார்படுத்துவது காணொளியொன்றில் தெரிந்ததில், அதிலிருந்த ஒருவரும் ஆயுதத்தைக் கொண்டிருக்கவில்லை.

அந்தவகையில், எஞ்சியிருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகளைத் தோற்கடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என வினவப்பட்டபோது, மிக விரைவாக என்று முஸ்தஃபா பாலி பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், வாகனங்களுக்கேற்ற வகையில் பெரியதான சுரங்கங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு பக்கூஸில் அமைத்துள்ளதாக புகைப்படங்கள் காண்பிப்பதாக, சிரியாவின் அயல்நாடான ஈராக்கியின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி, ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலொன்றை ஆரம்பிக்கக்கூடியளவுக்கு, ஈராக், சிரியாவில் பரவியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆயுததாரிகளையும் தேவையான தலைவர்களையும் வளங்களையும் இன்னும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கொண்டிருக்கலாம் என ஐக்கிய அமெரிக்க இராணுவம் எச்சரித்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X