2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஐ.எஸ் மீதான தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதி இடம் மீதான ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானத் தாக்குதலில், குறைந்தது ஏழு சிறுவர்கள் உட்பட 16 பொதுமக்கள் நேற்றுக்  கொல்லப்ட்டதாக ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கிய எல்லை நோக்கி வெளியேற முற்பட்டபோது கொல்லப்பட்ட குறித்த பொதுமக்களில் எட்டுப் பெண்களும் வயதான ஆணொருவரும் உள்ளடங்குவதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணியை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லையென்ற நிலையில், பொதுமக்களை இலக்கு வைப்பத்தைத் தடுப்பதற்காக மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதாக அது மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றது.

கிழக்கு சிரியாவில், ஈராக்கிய எல்லையுடனுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதி இடத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவிடமிருந்து கைப்பற்றுவதற்கான மோதலை கடந்த சனிக்கிழமை குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில்,  சிரிய ஜனநாயகப் படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் 19 பேர் நேற்றுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், ஒன்பது போராளிகளை சிரிய ஜனநாயகப் படைகள் இழந்ததாகக் கூறியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .