2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஐ.நா அமைதிகாக்கும் படையினர் மீது தாக்குதல்; 10 பேர் பலி

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலியின் வடக்குப் பகுதியில், சாட்டைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையினர் மீது நேற்று முன்தினம் (20) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 10 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 25 பேர் காயமடைந்தனர் என, ஐ.நாவும் மாலியிலுள்ள ஐ.நா பிரிவும் தெரிவித்தன.

அமைதிகாக்கும் படையினர் மீதான இத்தாக்குதல், அகுல்ஹொக் என்ற கிராமத்தில் இடம்பெற்றது எனத் தெரிவித்த ஐ.நா அமைதிகாக்கும் பிரிவு, அத்தாக்குதலை முறியடித்த போதிலும், தமது தரப்பில் இழப்புகள் ஏற்பட்டன எனத் தெரிவித்தது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட ஐ.நா, இத்தாக்குதலைக் கண்டித்ததோடு, மாலி மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் ஐ.நாவின் கடப்பாட்டில், இவ்வாறான தாக்குதல்கள் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், அந்நிலைப்பாட்டில் ஐ.நா செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் உறுதியாகவுள்ளார் எனவும் தெரிவித்தது.

இத்தாக்குதல் தொடர்பாக, டெலிகிராம் செயலியில் உரிமை கோரிய நுஸ்ரத் அல்-இஸ்லாம் என்ற ஆயுதக்குழு, சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி, இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பித்தமைக்குப் பதிலடி வழங்கும் நோக்கிலேயே இதை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டது.

நுஸ்ரத் அல்-இஸ்லாம் ஆயுதக்குழு, அல் குவைதாவுடன் தெடர்புகளைக் கொண்ட ஆயுதக்குழுவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X