2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.நா அலுவலகத்தில் சோதனை; உறவில் பாதிப்பில்லை என்கிறது ஐ.நா

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில், முரண்பாடுகள் அதிகமாகக் காணப்படும் பகுதியிலுள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில், நைஜீரியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. 

ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகமான “சிவப்புக் கூரை” என்றழைக்கப்படும் பகுதியிலேயே, கடந்த வெள்ளிக்கிழமை, சோதனை நடத்தப்பட்டது. 

இந்தச் சோதனை, அங்கிகாரம் அல்லது அனுமதி பெறப்படாமல் நடத்தப்பட்டது என, ஐ.நா தெரிவித்தது. குறிப்பாக, சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது. 

போகோ ஹராம் அமைப்பின் தலைவர், இந்தப் பகுதியில் காணப்படுகிறார் என்று கிடைத்த தகவலைத் தொடர்ந்தே, இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால், இதைத் தொடர்ந்து, நைஜீரிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திய ஐக்கிய நாடுகள், நம்பிக்கையும் கூட்டிணைவும் கொண்ட தங்களது உறவு, அப்படியே காணப்படுவதாகத் தெரிவித்தது. 

இந்தச் சோதனை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட நைஜீரிய இராணுவம், தாங்கள் சோதனை நடத்திய இடம், ஐ.நாவின் கீழுள்ள இடம் என்பதற்கான எந்தவோர் அறிகுறியையும் காணவில்லை எனவும், தங்களுடைய சோதனை முயற்சி வெற்றிபெற்றது எனவும் தெரிவித்தது. ஆனால், இந்தச் சோதனையில், சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .