2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை நெருங்கும் பிரித்தானியா

Editorial   / 2020 ஜனவரி 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் 31ஆம் திகதி வெளியேறுவதில் இன்னொரு படியை பிரித்தானியா நெருங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவுடனான ஒப்பந்தத்தை ஏற்பதற்கான சட்டமூலமானது நாடாளுமன்றத்தில் அதன் இறுதிக் கட்டத்தை நேற்றுத்  தாண்டிய நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதிர்வரும் இம்மாதம் 31ஆம் திகதி வெளியேறுவதை பிரித்தானியா நெருங்கியுள்ளது.

இந்நிலையில், சில சமயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் இறுதிக் கோட்டை ஒருபோதும் தாண்ட மாட்டோம் என உணர்ந்ததாகவும், ஆனால் இறுதிக் கோட்டைத் தாண்டி விட்டதாக அறிக்கையொன்றில் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாகவும், ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் 31ஆம் திகதி தாங்கள் வெளியேறுவோம் எனவும் ஒரு ஐக்கிய இராச்சியத்தை நோக்கி பயணிப்போம் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து சிறுவர் அகதிகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் சரத்தொன்று உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தின் மேற்சபையானது மேற்கொண்ட மாற்றங்களை நாடாளுமன்றக் கீழ்ச்சபை திருத்தியிருந்தது.

சட்டமூலத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றங்களை நாடாளுமன்ற மேற்சபை மீண்டும் அமுல்படுத்த முடியும் என்றபோதும் அது அவ்வாறு செய்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .