2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐரோப்பாவின் செயற்பாடுகளில் ஈரானுக்குத் திருப்தியில்லை

Editorial   / 2018 மே 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில், ஈரானின் அணுவாயுதச் செயற்பாடுகள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில், அதைக் காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் போதுமானவையாக இல்லை என, ஈரான் வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவட் ஸரீப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்தி ஆணையாளர் மிகுவெல் அரியஸ் கனேட்டியைச் சந்தித் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் ஸரீப் இவ்வாறு குறிப்பிட்டார்.

“அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் மீதான ஈரானிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அணுவாயுத ஒப்பந்தத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆதரவு, போதுமானதாக இல்லை” என அவர் குறிப்பிட்டார்.

தனது அணுவாயுதச் செயற்பாடுகளை ஈரான் நிறுத்துவதற்குப் பதிலாக, அந்நாடு மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதே, இவ்வொப்பந்தத்தின் ஏற்பாடாக உள்ள நிலையில், ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவைச் சேர்ந்த பல நாடுகள், ஈரானில் தமது முதலீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன.

ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகினால், ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது, ஐ.அமெரிக்காவால் தடை விதிக்கப்படும் என அஞ்சியே, இந்நிறுவனங்கள் இவ்வாறு பின்வாங்கியுள்ளதோடு, ஐ.அமெரிக்காவிடமிருந்து உறுதிமொழியையும் எதிர்பார்த்து நிற்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X